Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளரிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..

0

'- Advertisement -

Ad banner

நண்பர் போன்று பேசி ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர் யிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..

சைபர் கிரைம் போலீசார் விசாரனை.

திருச்சி ஸ்ரீரங்கம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூத்த மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி இவரது நண்பரான அய்யனார் துளசிலிங்கம் என்பவர், வாட்ஸ்அப் கால் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, தான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகவும், சென்னைக்கு வரத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மருமகனுக்கு விசா தொடர்பான கட்டணங்களுக்காக அவசரமாக ரூ.85,000 தேவைப்படுவதாக விஸ்வநாதனிடம் கேட்டு உள்ளார். ஆனால் விஸ்வநாதனிடம் அவ்வளவு பணம் இல்லாததால், தனது மகளின் வங்கி கணக்கைப் பயன்படுத்தி ரூ.30,000 அனுப்பி வைத்து உள்ளார். அதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் தன்னைக் காவலில் வைத்திருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் மட்டுமே விடுவிப்பார்கள் திருச்சி வந்தவுடன் திரும்பி தந்து விடுகிறேன் என்று அய்யனார் துளசி லிங்கம் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய விஸ்வநாதன், அவர் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார். இதை தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து விஸ்வநாதன் விசாரணை செய்தபோது தன்னுடைய நண்பர் பெயரில் ஒரு மர்ம ஆசாமி செல்போனில் நண்பன் போன்று பேசி பணம் பெற்று உள்ளனர் என தெரிய வந்தது. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் , இது தொடர்பாக, ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.