Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் அதிரடி ஆரம்பம்.ஆளுங்கட்சியின் முதல் விக்கெட் அவுட்

0

'- Advertisement -

Ad banner

தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு ஏதோ ஓர் அலையில் தமிழக வெற்றி கழகம் தட்டு தடுமாறி ஆட்சி அமைத்தது.இனி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் மட்டும்தான் என எண்ணி அதிமுகவினர் பலரும் அக்கட்சியில் சென்று இணைந்து வந்தனர் .அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலிருந்தும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மட்டும் தமிழக வெற்றி கழகத்தில் பெரும் (பதவிகள் கிடைத்துவிடும் என எண்ணி ) இணைந்து வந்தனர்.

ஆனால் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் தற்போது கட்சியில் இணைந்து வருபவர்களுக்கு கட்சியில் பதவியோ , வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எண்ண வேண்டாம் என தெளிவாக கூறிவிட்டார்.

அதிமுகவில் அமைச்சர்களாக, மாவட்ட செயலாளர்களாக,மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், பகுதி செயலாளராக,பல பதவி சுகங்களை அனுபவித்து வந்தவர்கள் அந்தக் கட்சியிலும் இதே போன்று பதவிகள் நமக்கு கிடைக்கும் என எண்ணி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடைபெறவில்லை. அப்போது அதிமுகவிலிருந்து சென்றவர்கள் ரப்பர் பந்தை சுவற்றில் எறிந்தது போன்று அதிமுகவிற்கு திரும்பி வருவார்கள் என மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கூறியிருந்தார்.

தற்போது இதனை அதிரடியாக செயல்படுத்த முடிவெடுத்த கார்த்திகேயன் முதல் விக்கெட்டாக அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை  மாவட்ட செயலாளராக பணியாற்றிய லோகநாதனை தட்டி தூக்கி உள்ளார். லோகநாதனை மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இனைய வைத்துள்ளார்.

 

இது குறித்து ஆவின் முன்னாள் சேர்மனும் மாநகர் மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் கூறும்போது :-

அதிமுகவின் பல பதவிகளில் மற்றும் பொறுப்புகளில் இருந்தவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அக்கட்சியில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை அனைவரும் அறிவார்கள்.

 

தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் பூமராங் போன்று மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைவார்கள்,அதற்கான முழு முயற்சியை எடுத்து வருகிறேன் என கூறினார்.

இந்த நிகழ்வின்போது அம்மா பேரவை மாநில இணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன், மற்றும் நிர்வாகிகள் டி எஸ் எம் செல்வமணி, வி பி எஸ் மகாதேவன், இலியாஸ், சுரேஷ் குப்தா, சுதாகர், கோழிக்கடை பாலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து இனி  ஒவ்வொரு விக்கெட்டாக சாய்ப்பார் கார்த்திகேயன் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.