Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் சார்பில் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் தொடக்கம் .புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.

0

'- Advertisement -

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக்  சார்பில் “தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் தொடக்கம் .

Ad banner

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் அமைப்பின் 2026–27-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதிய தலைவராக ரொட்டேரியன் பி. ராஜ்மோகன், செயலாளராக ரொட்டேரியன் எச். மீனாம்பிகை ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

​விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஜே. கார்த்திக், முசிறி சட்டமன்ற உறுப்பினர் மு. விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

​விழாவின் முக்கிய நிகழ்வாக, அமைப்பின் கனவுத் திட்டமான “தளிர் தலைமுறை” என்ற பசுமை இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

​தமிழகத்தின் 10 முக்கிய மலைப் பகுதிகளில் முதற்கட்டமாக 2 லட்சம் நாட்டுமர விதைப்பந்துகளை தூவும் இலக்குடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் இத்திட்டம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் அடுத்த தலைமுறைக்கு பசுமையான சூழலை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

​மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சமூக சேவையில் அதிகளவில் ஈடுபடுத்தும் நோக்கில், ஒரு புதிய ரோட்டரி சங்கம், ஒரு புதிய ரோட்டராக்ட் சங்கம் மற்றும் 3 புதிய இண்டராக்ட் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் “தளிர் தலைமுறை” திட்டம் மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

​இத்திட்டத்தை ‘ஸ்ரீ வண்ணமயில் சிட்ஸ்’ உரிமையாளர் எஸ். பாண்டியன், ‘யுனிவர்சல் வாட்டர் சொல்யூஷன்’ உரிமையாளர் பி. முரளிதரன்,  எப்.ஒ.என்.எஸ் டிரஸ்ட் அறங்காவலர் டி. ராம்குமார், ‘கோபால் தாஸ் ஜூவல்லரி’ சார்பில் கே. கேசவராஜ், ரொட்டேரியன். முகமது ரிஸ்வான், முன்னாள் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் கார்த்திக், முசிறி எம்.எல்.ஏ. மு. விக்னேஷ், ரோட்டரியன் தலைவர் பி. ராஜ்மோகன், செயலாளர்  ரோட்டரியன் எச்.மீனாம்பிகை ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

​தொடக்கமாக, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டு, பொருத்தமான இடங்களில் அவற்றை விதைத்து பசுமையைப் பரப்ப அழைப்பு விடுக்கப்பட்டது. புதிய தலைவர் ரொட்டேரியன் ராஜ்மோகன் ஏற்புரையாற்றுகையில், “பதவியேற்பதற்கு முன்பே இரத்ததான முகாம், ‘தங்கமே தங்கம்’ திட்டம், பிராட்டியூர் பல்லுயிர் மையச் சுற்றுச்சூழல் முயற்சி மற்றும் ‘நீரின்றி அமையாது உலகு’ திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

​மேலும், இந்த ஆண்டில் ‘நீரின்றி அமையாது உலகு’ திட்டத்தின்கீழ் 20 அரசுப் பள்ளிகள் மற்றும் தேவையான இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் நிறுவுதல், மாதம்தோறும் 300 பேருக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன” என்றார்.

​இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.