Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் 28 வது முதலாம் ஆண்டு துவக்க விழா

0

'- Advertisement -

Ad banner

திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் 28 வது முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவர் தனது உரையில் மாணவ மாணவிகள் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு சேர்ந்துள்ளீர்கள் ஒரு புதிய அத்தியாயத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொடங்குகிறீர்கள் அதற்கு ஏற்ப உங்கள் மனநலத்தையும், உடல் நலத்தையும் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் தானாக முன்வந்து கல்லூரியில் பல பொறுப்புகளை எடுத்துக்கொண்டு அந்த பொறுப்புகளை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் திறமையை நீங்கள் மேன்மேலும் வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் வடிவேல் அவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை வாசித்தார்,அதை அனைவரும் பின் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர் பேசுகையில் போதைப் பழக்கத்தின் தீமையை எடுத்து கூறி மாணவர்கள் போதைப் பழக்க வழக்கங்களில் ஆட்படாமல் மனக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

சிங்கப்பெண் அதிரடிப்படையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவ மாணவியர் பாதுகாப்பு விஷயங்களையும், பெண்களின் பாதுகாப்பு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர்.

கல்லூரி தலைவர் மற்றும் செயலர் அவர்களின் ஆலோசனையின்படி முதல்வர் பாலமுருகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் மூத்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறியது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.