Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் டூவீலரில் இருந்து தவறி விழுந்து நபர் பரிதாப பலி .

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

போக்குவரத்து போலீசார் விசாரணை .

கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 10 ந் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து உள்ளார்.

அப்பொழுது அவர் உறையூர் சீனிவாசன் நகர் 7வது கிராஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்து உள்ளார். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத வண்ணம் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்தது. இந்த விபத்தில் மலர்வேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலர்வேல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் .இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.