
திருச்சியில் புகையிலை விற்ற 3 பேர் கைது செய்து ஜாமீனில் விடுதலை .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9ம் தேதி) போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலை அன்பில் தர்மலிங்கம் நகர் அருகே
புகையிலை விற்ற கொல்லங்குளம் பகுதியை சேர்ந்த வேலுமணி (வயது 53 ) என்பவரை எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று பெரிய மிளகு பாறை அருகே புகையிலை விற்ற மேட்டுப்பட்டி ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா ( வயது 27 ) போலீசார் கைது செய்தனர் . மேலும் அரசு மருத்துவமனை அருகே புகையிலை விற்ற அரியாவூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாபு (வயது 38) என்பவரை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த கிராம் 380 புகையிலை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் ஜாமினில் விடுவித்தனர்.

