Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை ஓடும் பேருந்தில் அபேஸ்.

பெரம்பலூர் மாவட்டம் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 65.) சம்பவத்தன்று இவர் ஸ்ரீனிவாசா நகர் 7 வது கிராசில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்வதற்காக நகர பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் அவர் சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கிய பின் தான் வைத்திருந்த பையை பார்த்துள்ளார். அப்போது அவர் வைத்திருந்த பையில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.