
காவிரியில் பொதிய அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஒடவும்
பருவமழை நல்ல முறையில் பெய்து விவசாயம் செழிக்கவும், காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடவும் வேண்டி காவிரி தாய்க்கு சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது
சிவாச்சாரியார்களை கொண்டு காவேரி நடு கரையில் உக்கிர காளியம்மன் கோவில் அருகில் காவிரி தாய்க்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
பூஜையில் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி டிரஸ்டி கே ஆர் பிச்சுமணி ஐயங்கார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மகாதானபுரம் ராஜாராம், ஸ்ரீரங்கம் பாலு தீட்சதர் வயலூர் ராஜேந்திரன், அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்க பொருளாளர் பிரேம்குமார், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், யோக.விஜயகுமார் சுற்றுப்புற கிராம விவசாயிகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தீர்த்த குடம் வைத்து காவிரி தாய்க்கு பூஜை செய்து, பின்னர் கோமாதா பூஜை செய்து அனைத்து தெய்வங்களுக்கும் யாக வேள்வி நடத்தி தீர்த்த குடத்தை ஊர்வலமாக எடுத்து காவிரியில் தீர்த்தத்தை காவிரி ஊற்றி காவிரி தாய்க்கு சிறப்பு ஆர்த்தி மலர் வழிபாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் சிறப்பு செய்து காவேரியில் தண்ணீர் வரவேண்டிய பூஜையில் கலைந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கத் தலைவர் யோகநாதன் செய்திருந்தார்.

