போலி ஆவணம் மூலம் பள்ளி அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார்
அன்னை கே ஆர் சி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வகித்து வரும், பம்மல் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஶ்ரீ சங்கரா பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஶ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் நந்தகுமார் மீது சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.
அதன் விபரம் வருமாறு …….
கடந்த ஆட்சியில் போலி அரசு துறை முத்திரைகளையும், அரசு அதிகாரிகளின் போலி கையெழுத்துகளையும் நந்தகுமார் போட்டுள்ளார். இந்த போலியான செயல் மூலம் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பள்ளிக்கான அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று (NOC) பெற்றுள்ளார். அரசுக்கு சமர்பிக்கப்பட்ட இந்த ஆவணங்களில் பள்ளியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் நந்தகுமார். ஆனால் நந்தகுமாரின் பள்ளி சென்னை பம்மல் பகுதியில் இயங்கிவருகிறது.

கே.ஆர். நந்தகுமார், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் (தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு) மாநில பொதுச்செயலாளராக உள்ளார்.இவர் தனியார் பள்ளிகளில் நான் மற்றும் கல்வித்துறை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
(தனியார் பள்ளிகள் சங்கம்) நடத்தும் இப்பள்ளி செயல்படும் நிலமானது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது! இத்தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! சட்ட விதிமுறைகளை மீறி கோயில் நிலத்தை ஆகிரமித்துள்ளார் நந்தகுமார்.
பள்ளி கட்டிடத்திற்கான CMDA திட்ட அனுமதி- பம்மல் நகராட்சி மற்றும் பல்லாவரம் வட்டாட்சியர் ஆகியோர் வழங்கிய சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது! இதனால் அக்குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளார்கள்.

