Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் இளம் ரத்தம் பாய்ச்சி உள்ள எடப்பாடி பழனிச்சாமி .தீவிர விசுவாசிகளை பரிந்துரை செய்த மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டுகள்

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் இளம் ரத்தம் பாய்ச்சி உள்ள எடப்பாடி பழனிச்சாமி .

Ad banner

அண்மையில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளராக

என்ஜினியர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக நிர்வாகிகளை நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதில் பெரும்பாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது..கட்சியில் சாதாரண வட்ட செயலாளராக பணியாற்றி வந்தவர்கள் இன்று பகுதி செயலாளர் பதவி பெற்றுள்ளனர்.இப்படி கட்சியில் அடிப்படை உறுப்பினராக பல நாட்களாக பணியாற்றி வந்து நபர்களுக்கு பதவி வழங்கி திருச்சி மாநகர அதிமுகவை சுறுசுறுப்பாக இயங்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.பதவி பெற்றவர்களில் பலர் இளைஞர்கள் .

.இதற்கு முக்கிய காரணம் தற்போது அதிமுக மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றி வரும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் யார் யார் அதிமுகவின் தீவிர விசுவாசி என்பதை அறிந்து அவர்கள் பெயரை பரிந்துரை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை  தொடர்ந்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் செபஸ்டி பிளாரன்ஸ், வெல்லமண்டி சண்முகம், திருச்சி மாநகர் மாவட்ட

எம்ஜிஆர் மன்றம் மாவட்ட செயலாளர் வரகனேரி ராஜேந்திரன், எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுந்தர் சிங்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா, மாணவரணி மாவட்ட செயலாளர் பாலா மோகன் ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துமாரி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் நத்தர்ஷா, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தாயார் சீனிவாசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்,கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

பகுதி செயலாளர்கள் :

 

மேலும் பகுதிகள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு

பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி சிந்தாமணி பகுதியில் 12,12 ஏ, 12பி,13,13ஏ,13பி உட்பட்ட வட்டங்களுக்கு VPS மகா என்னும் சிந்தாமணி

TVK ad

மகாதேவன்,மலைக்கோட்டை வடக்கு பகுதி 15,15ஏ,15பி, 19,19ஏ,19 பிஆகிய வட்டங்களுக்கு சுதாகர்,மலைக்கோட்டை தெற்கு பகுதி 14,14 ஏ,14 பி,17, 17 ஏ,17 பிஆகிய வட்டங்களுக்கு

அன்பழகன்,

காந்தி மார்க்கெட் பகுதி 18,18ஏ,20,20 ஏ,20பிஆகிய வட்டங்களுக்கு கலிலுல்ரஹ்மான்,பாலக்கரை வடக்கு பகுதி 21,21ஏ,21பி, 30,30ஏ,30 பிஆகிய வட்டங்களுக்கு இலியாஸ்,

பாலக்கரை தெற்கு பகுதி 31,31ஏ,31பி, 32, 32ஏ வட்டங்களுக்கு சுரேஷ் குப்தா, எடத்தெரு வடக்கு பகுதி 33,33ஏ,33பி, 48,49,49ஏ ஆகிய வட்டங்களுக்கு வாசுதேவன், எடத்தெரு தெற்கு பகுதி 34, 34பி,50,50 ஏ,50பி ஆகிய வட்டங்களுக்கு எடத்தெரு பாபு,சுப்பிரமணியபுரம் பகுதி 47,47ஏ, 47பி,59,59ஏ,59பி உட்பட்ட வட்டங்களுக்கு செல்லப்பா, ஏர்போர்ட் வடக்கு பகுதி 63,63ஏ,63பி, 64ஏ,64பி ஆகிய வட்டங்களுக்கு பாலாஜி, ஏர்போர்ட் தெற்கு பகுதி 61,61 ஏ,61பி,65,65ஏ,65பி ஆகிய வட்டங்களுக்கு சரவணன்,உறையூர் வடக்கு பகுதி 9,

9ஏ,9பி,10,10ஏ,10பி ஆகிய வட்டங்களுக்கு

உறந்தை முத்தையா,

உறையூர் தெற்கு பகுதி 23,23ஏ,23பி, 24,24பி ஆகிய வட்டங்களுக்கு ஜான் எட்வர்டு, தில்லைநகர் பகுதி 11,11ஏ,11பி,22,22 ஏ 22பி ஆகிய வட்டங்களுக்கு தில்லை முருகன், அண்ணா நகர் பகுதி 28,28ஏ,28பி, 29,29ஏ,29பி ஆகிய வட்டங்களுக்கு ஜெகதீஸ்வரன், பீமநகர் பகுதி 51,51 ஏ,51பி,52,52ஏ,52பி ஆகிய வட்டங்களுக்கு எம் ஆர் ஆர்.முஸ்தபா, புத்தூர் பகுதி 26,

26ஏ,26பி,27,27ஏ,27 பி ஆகிய வட்டங்களுக்கு புத்தூர் ராஜேந்திரன், சண்முகா நகர் 8,

8ஏ,8பி,25,25ஏ,25பி ஆகிய வட்டங்களுக்கு

பி எம்.குமார், பொன்நகர் பகுதி 53,53ஏ,53பி,54,54ஏ, 54 பி ஆகிய வட்டங்களுக்கு மோகன்,கருமண்டபகுதி 55,55ஏ,55பி, 56,56ஏ,56பி ஆகிய வட்டங்களுக்கு முத்துக்குமார்,

காஜாமலை பகுதி 58,58ஏ,58பி,60, 60ஏ 60பி ஆகிய வட்டங்களுக்கு கலைவாணன்,எடமலைப்பட்டி புதூர் பகுதி 57,57ஏ,57பி, 62,62ஏ,62பி ஆகிய வட்டங்களுக்கு வசந்தம் செல்வமணி ஆகியோர் பகுதி செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.எனவே அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் கழக உடன் பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.