Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஒரே நாளில் மாநகரில் கஞ்சா,போதை மாத்திரை, மது விற்ற 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற நான்கு பெண்கள் உள்பட 18 பேர் கைது; பணம் பறிமுதல்.

Ad banner

போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை அறிந்து திருச்சி மாநகர போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று மட்டும் எடமலைப்பட்டி புதூர், அரியமங்கலம், கே கே நகர், கண்டோன்மெண்ட், செசன்சு கோர்ட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொன்மலை, விமான நிலையம், காந்தி மார்க்கெட், பாலக்கரை போன்ற போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள், புகையிலை பொருட்கள், கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை செய்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

TVK ad

அதில் மதுரை மெயின்ரோடு அன்பில் தர்மலிங்க நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த முகமது யாசிர் (வயது 19), இ.வி.ஆர். தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அரியமங்கலத்தை சேர்ந்த ஞான ஆரோக்கியம் என்ற அக்பர் அலி ( வயது 47), கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக கே.கே. நகர் பகுதியை சேர்ந்த விஷால் (வயது 23 ), ரேஸ் கோர்ஸ் சாலையில் கஞ்சா விற்றதாக கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 26) எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக ராம்ஜி நகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 44, )

மேலும் இதேபோல் முடுக்குப்பட்டி பகுதியில்உள்ள டாஸ்மாக் கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரஸ் (வயது 35,) கணபதிபுரம் ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக சோமரசம்பேட்டையை சேர்ந்த ஆனந்த் (வயது 35), கண்ணன் (வயது 38,) எஸ்பிஐ காலனி ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மணிகண்டத்தைச் சேர்ந்த தனபால் (வயது 40 ) பொன்மலை சந்தை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பாத்திமா நகரை சேர்ந்த ஸ்டீபன் டேவிட் ராஜ் (வயது 34) பொன்மலை ரயில்வே குடியிருப்பு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்த சுடலைமணி (வயது 36 ), விமான நிலையம் முத்தையா நகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 19)

 

கல்பாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக வரகனேரி பகுதியைச் சேர்ந்த அருணகிரி ( வயது 46 )

 

மேலும் இதே போல் பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக பாலக்கரை பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் (வயது 22,) சுவாதி (வயது 23), ஆலம் தெரு ஜங்ஷன் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக பாலக்கரை பகுதியை சேர்ந்த பரகத் நிஷா ( வயது 42 ), இந்திராணி (வயது 55), அனிதா மேரி (வயது 44), ஆகியோர்களை அந்தந்த காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து மொத்தம் 250 கிராம் கஞ்சா, 350 கிராம் புகையிலை பொருட்கள், 29 போதை மாத்திரைகள், 2 மதுபாட்டில்கள், ரூபாய் 23,600 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.