திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டி.என்.சிவகுமார் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்
திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டி.என்.சிவகுமார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி வந்த டி.என்.சிவக்குமார் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அ.தி. மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது,

லால்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் உடன் இருந்தார்.
மேலும் டி.என்.சிவகுமாருக்கு, ஒன்றிய செயலாளர்கள் லால்குடி சூப்பர் நடேசன், அசோகன், புள்ளம்பாடி அருணகிரி,நகர செயலாளர்கள் லால்குடி பொன்னி சேகர், பூவாளூர் ஜெயசீலன், புள்ளம்பாடி ஜேக்கப்அருள்ராஜ், கல்லக்குடி பிச்சைபிள்ளை மற்றும் சிறுகளப்பூர் முத்தமிழ்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

