Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு உழைப்போம். வைகோ உறுதி

0

'- Advertisement -

தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.

Ad banner

இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TVK ad

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘வரும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடாது’ என்று தெளிவாக தெரிவித்தார். மேலும் அவர், ‘அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் மீண்டும் முதலமைச்சர் பதவியை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொள்வார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வைகோ புகழாரம் பாடிய வகையில், ‘முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த ஊழலை ஒழித்து, தமிழ்நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டி வருகிறார்’ என்று பாராட்டினார். தவெக கூட்டணிக்கு மதிமுக முழு ஆதரவுடன் உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.