Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : ரயில்வே டிராக்கில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண்.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ….

0

'- Advertisement -

இன்று (28.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முன்பாக தஞ்சாவூர் மார்க்கத்தில் சோழகம்பட்டி ரயில் நிலையத்திற்கும் திருவரும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே திரு நெடுங்குளம் அருகே உள்ள ரயில்வே டிராக்கில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு இறந்துள்ளார். இறந்தவர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற சேலை அணிந்துள்ளார். வெள்ளை நிற ஆண்கள் அணியும் சட்டையும், சிவப்பு நிற துண்டு மற்றும் பாசி மாலை அணிந்துள்ளார்.

 

Ad banner

இறந்தவரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு திருச்சி ரயில்வே ஜங்ஷன் சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் அனுப்பி விசாரித்து வருகிறார்.

TVK ad

மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்

94434 72524 மற்றும்

90805 63321

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.