Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .

0

'- Advertisement -

திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .

Ad banner

அங்குலம் அங்குலமாக போலீசார் சோதனை.

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது, தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

TVK ad

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அறிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகத்திலும் சோதனை செய்தனர்.அங்குள்ள அறைகளில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.இந்த சோதனையின் முடிவில் அது வெறும் புரளி என தெரிய வந்தது.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி யார் என்பது குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் முகவரி என்ன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே 31ஆம் தேதி இதே போன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.