Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

படுத்தால் தான் சொத்தில் பங்கு.அண்ணன் இறந்த அடுத்த நாள் அண்ணியை படுக்கைக்கு கூப்பிட்ட மைத்துனர்.திருச்சியில் பரபரப்பு சம்பவம் .விதவைக்கு கிடைக்குமா பாதுகாப்பு ?

0

'- Advertisement -

என்னுடன் படுத்தால் மட்டுமே வீட்டில் தங்கலாம்; கணவரின் தம்பி மீது பெண் பகீர் புகார் – திருவெறும்பூரில் பரபரப்பு சுவர் புகார்

Ad banner

திருவெறும்பூர் அருகே கணவரை இழந்த பெண் ஒருவரிடம், அவரது கணவரின் தம்பியே பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் இன்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும், குவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக ராஜ்குமார் உயிரிழந்தார்.

TVK ad

கணவரின் மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்து வந்த வீட்டிலேயே வசித்து வரும் காயத்ரி, தனது கணவர் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்த நிலத்திலும் முறையாகக் கட்டணம் செலுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

இந்தச் சூழலில், ராஜ்குமாரின் தம்பி ஐயர் என அழைக்கப்படும் அசோக்குமார் மற்றும் அவரது தாய் சுந்தரவல்லி ஆகியோர், காயத்ரியை அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டி வருகின்றனர். வீட்டைத் தருவதற்கு மறுப்பு தெரிவித்து வரும் அவர்கள், காயத்ரியை மனரீதியாகப் படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் உச்சகட்டமாக,ஐயர் என அழைக்கப்படும் அசோக்குமார் காயத்ரியிடம் அண்ணன் பிறந்த 13-வது நாளைக்கு இருந்து தவறாக நடக்க முயன்றதோடு, “உன்னை வப்பாட்டியாக வைத்துக்கொள்கிறேன், அதன் பிறகு நீ உடன்பட்டால் தான் வீட்டில் தொடர்ந்து தங்கலாம்” என மிகக் கொச்சையாகப் பேசி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தொடர் அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட காயத்ரி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தமக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ள காயத்ரி, தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள தனது கணவரின் தம்பியுடன் சேர்ந்து வாழ கூறும் மாமியார் மற்றும் செக்ஸ் டார்ச்சர் தரும் மைத்துனர் ஐயர் என அழைக்கப்படும் அசோக்குமார் அவர்களுக்கு காவல்துறை எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காயத்ரி வேண்டுகோள் கொடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.