திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகே குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஜெபக்கூட்டம் என்ற பெயரில் பெரிய ஒலிபெருக்கிகள் உபயோகப்படுத்தி பொதுமக்களுக்கு தொந்தரவு .காவல்துறை கண்டித்தும் பயனில்லை
திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகில் காவிரி சூப்பர் மார்க்கெட் பின்புறம் உள்ள பீம நகர் நியூ ராஜா காலணியில் 65/B2 என் முகவரியில் உள்ள வீட்டில் நடைபெறும் இந்த ஜெப கூட்டத்திற்க்கு பெரிய பெரிய ஒலிபெருக்கிகள் (ஸ்பீக்கர்கள்) உபயோகப்படுத்துவதால் அருகில் குடியிருப்பவர்களுக்கு பெருதும் சிரமங்கள் ஏற்ப்படுகின்றது. குறிப்பாக வயதானவர்கள் , சிறுவர்கள் படிக்கும் மாணவர்கள் ஒலிபெருக்கியில் இருந்து வரை வரும் சத்தத்தினால் (கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் இந்த சத்தத்தினால் படிக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளனர்) அன்றாட வீட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது அருகில் இதயம் பலவீனமான வயசானவர்கள் அதிகம் உள்ளவர்கள் சில நோய் வாய் பட்டு கூட இருக்கிறார்கள் அதையும் இவர்கள் பொருட்படுத்தாமல் அதிக சத்தத்துடன் இவர்கள் அழுகுரல் எழுப்பி கைத்தட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். இது கேட்கும் பொழுது மனது பதட்டம் அடைகிறது சாதாரண மக்களுக்கு இப்படி என்றால் நோய்வாய் பட்ட முதியவர்களுக்கு கூற முடியவில்லை இவர்கள் ஒலிபெருக்கி மூலம் கூட்டமாக கூடி கத்துகிறார்கள் இது அக்கம் பக்கத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வாரத்திற்கு பல நாட்கள் (இன்று கூட) பல மணி நேரங்கள் இது மாதிரி ஜெப கூட்டங்கள் இந்த குடியிருப்பு இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அருகில் உள்ள செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்து பலமுறை காவலர்களும் ஒலிபெருக்கி உபயோகப்படுத்தக்கூடாது என கூறியும் வீட்டின் உரிமையாளர் ஆரோக்கியராஜ் கேட்காமல் வீட்டினை உள்வாடைக்கு ஜெபக்கூட்டம் ஒளிபெருக்கியுடன் நடத்த தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறார் .
குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் ஒலிபெருக்கி இல்லாமல் கத்தினால் கூட பரவயில்லை எனவே காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் அல்லது ஜெபம் கூட்டம் நடத்த வீட்டை உள் வாடகைக்கு விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அப்போது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.

