மலைக்கோட்டை டூ ஜார்ஜ் கோட்டை, திருச்சி ம.நீ.ம நிர்வாகிகள் தகவல்
மலைக்கோட்டை டூ ஜார்ஜ் கோட்டை, திருச்சி ம.நீ.ம நிர்வாகிகள் தகவல்
மலைகோட்டை டூ ஜார்ஜ்கோட்டை
ம நீ மய்யம் புதுகணக்கு.
திருச்சி மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம் அந்தஸ்து பெற கூடியது
மேற்கு மண்டல மாவட்டங்களான கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்புர் கோவை, நீலகிரி
தென் மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துகுடி, விருதுநகர்,தேனி உள்ளிட்ட மாவட்டங்கள்
வடக்கு மண்டல மான விழுப்புரம், திருவண்ணாமலை காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள்
மத்திய மண்டலங்களான
திருச்சி, தஞ்சை,பெரம்பலுர், நாகை அரியலுர் உள்ளடங்கிய மாவட்டங்கள் என ஒட்டு மொத்த 4 மண்டலங்களை இணைக்கும் மையப்பகுதியாக திகழுகிறது திருச்சி
24 மணி நேர போக்குவரத்து எல்லா மண்டல மாவட்டங்களையும் இனைக்கும்
மும்மத ஸ்தலங்கள்
ஒரே பகுதியில் கொண்டது.
பல அரசியல் தலைவர்கள் , திரைபட கலைஞர்கள் உருவாக்கிய நகரம்
பல அரசியல் போரட்டடங்களை கண்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி அரசியல் சட்ட மன்ற பிரவேசத்திற்க்கு பிள்ளையார் சுழி போட்டது திருச்சி
தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா போன்ற திரை உலக கலைஞர்களை தந்த திருச்சி
இந்தி எதிர்ப்பு போராட்ட தியாகிகள் விராலிமலை சண்முகம் சின்னசாமி உயிர் நீத்து கல்லறைகள் கொண்டது திருச்சி
1967. க்கு பிறகு தி.மு.க ஆட்சிகட்டிலில் அமர வழி வகுத்தது திருச்சி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாட்டியின் ஊர் திருச்சி ஸ்ரீரங்கம்
2011 தேர்தலில் இங்கு போட்டியிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கினார்
ஜெயலலிதா.
தற்போது இரு பெரும் தலைவர்கள் இல்லாத சூழலில்
ரஜினி, விஜய் போன்றோர் அரசியலுக்கு தற்போதைக்கு வராத நிலையில் நட்சத்திர அரசியல் தலைவராக திகழும் மக்கள் நீதிமய்ப தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் குறிப்பாக கமலுக்கு வெற்றி வாய்ப்பை தரும் தொகுதியாக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்த 1989-90.க்கு பிறகு கமலின் பிறந்த நாளை முன்னிட்டு பரபரப்பான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர் ம.நீ. மய்யம் கட்சி தொண்டர்கள்
ஒரு வேளை கமல் போட்டியிடாவிட்டாலும் அக்கட்சியின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அது கமலின் பிரதிபலிப்பாக அமைந்து வெற்றி பெற வேண்டும் என்பதால் சென்டிமென்டாக தனது பிரச்சாரத்தை முதலில் திருச்சியில் இருந்தே துவக்குகிறார் கமல்
இதை தான் சிம்பாலிக்காக மலைகோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டை என போஸ்டர் அடித்து முதல்வர் வேட்பாளர் ஜெ.வுக்கு பிறகு திருச்சியில் இருந்து கமலை முன்னிலை படுத்தி வருகின்றனர்
இதற்கான ஆயத்த பணியாக இங்கு பெரும்பான்மை வாக்குகள் – குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஜன 26 கமல் வருகைக்கு பிறகு புதிய எழுச்சியுடன் நம்மவரை கிழக்கு தொகுதியில் களம் காண செய்து வெற்றி பெற செய்வோம் என திருச்சியை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், வழக்கறிஞர் கிஷோர் குமார், S.K.S. டிராவல்ஸ் சதீஷ்குமார் போன்ற மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கூறினார்.