சாரதாஸ் நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை தேவை.ம.நீ.ம. வழக்கறிஞர் கிஷோர் வேண்டுகோள்.
சாரதாஸ் நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை தேவை.ம.நீ.ம. வழக்கறிஞர் கிஷோர் வேண்டுகோள்.
சாரதாஸ் நிர்வாகம் “சவுக்கு கட்டைகளை” சரிசெய்யுமா…??
#மாநகர காவல் துறைக்கு பணிவான கோரிக்கை….
நம்ம ஆட்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் கோடிகளை கொட்டி வீடு கட்டினாலும் வீட்டு வாசல் படியை மாநகராட்சி ரோட்டில் இரண்டு அடி இழுத்து கட்டினால் தான் திருப்தியாக இருக்கும். இதுபோல தான் திருச்சி சாரதாஸ் ஜவுளி கடையின் செயல் உள்ளது.
தீபாவளி பண்டிகை காலம் மட்டுமல்லாது எல்லா நேரத்திலும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி திருச்சி N.S.B சாலை. இந்த சாலையில் அமைந்துள்ள சாரதாஸ் ஜவுளி நிறுவனம் மக்கள் நடக்ககூடிய சாலையில் “சவுக்கு கட்டைகளையும்” பேரிகார்டுகளையும் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை வரிசையாக நிறுத்தி கடைக்குள் அனுமதிப்பதற்காக ஏற்படுத்தியுள்ளனர். இந்த தடுப்பு கட்டைகளால் அந்த பகுதியில் நடக்கவே பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை உடனடியாக சாரதாஸ் நிர்வாகமோ அல்லது திருச்சி மாநகர காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வழக்கறிஞர் கிஷோர் குமார் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.