அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்திருந்து இருந்தார் முதல்வர் விஜய்.திருச்சியில் அவரது பிறந்தநாளுக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா?
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்க தவெக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தடை விதித்துள்ளார். போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வைப்பவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும், சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என அக்கட்சி தலைமை எச்சரித்து இருந்தது.
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் சாலை பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை இந்த உத்தரவின் முக்கிய நோக்கங்களாகும்.
குறிப்பாக நமது கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள், குடும்ப விழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்காக சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் முறையான அனுமதியின்றி பேனர்கள் வைப்பது மற்றும் விதிகளை மீறுவது சட்டவிரோதம். அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்து இருந்தது.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முடிவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சியின் தொண்டர்கள் இந்த விதியை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட உத்தரவு இன்று திருச்சியில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக ஆங்காங்கே எந்தவித முன்னாள் நமது இன்றி பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. (திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை யாருக்கும் தொந்தரவு இல்லை என தடையில்லா சான்று பெற்ற பின்பு தான் பேனர்கள் வைக்க வேண்டும், அதுவும் நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன் நிகழ்ச்சி முடிந்த இரண்டு நாள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்)

திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே எந்தவித அனுமதியும் இன்றி பொதுச் செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் படத்தைவிட நிர்வாகி படத்தை பெரிதாக வைத்து (திருச்சி அமைச்சர் படம் சிறிதாக ஒர் ஓரமாக) முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி பிரம்மாண்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

சிக்னலில் கிராஸ் செய்யும் நபர்கள் பேனரில் என்ன உள்ளது என்பதை பார்த்தவாறு வாகனத்தை ஓட்டுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது :-
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த உடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக யாரும் எந்தவித பேனர்கள் வைக்க கூடாது அப்படி வைத்தால் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறியிருந்தார் இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது,ஆனால் தற்போது அவரது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரம் எங்கும் பிரம்மாண்டப் பேனல்கள் வைத்துள்ளது முதல்வருக்கு தெரியாதா? அவர்கள் மீது முதல்வர் கூறியது போன்று நடவடிக்கை எடுக்கப்படுமா? காவல்துறையினர் அனுமதி இல்லாத பேனர்களை ஆளும் கட்சிக்கு அஞ்சாமல் அகற்றுவார்களா ? கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இது போன்ற தொண்டர்களை கட்சியில் இருந்து பொதுச் செயலாளராக நீக்குவாரா? எனக் கேட்டு உள்ளார்.

