திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.
திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது 67) இவர் நேற்று புதன்கிழமை 17 ம் தேதி தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அவரது பின்னே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். உடனடியாக பாஸ்கர் அவரை கையும் களவுமாக பிடித்து கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார் கேகே நகர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருச்சி ஜே . ஜே. நகரை சேர்ந்த கென்னடி (வயது 43) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஏகே நகர் காவல் நிலைய போலீசார் கென்னடியைகை செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

