உடையான்பட்டி ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.திருச்சி கே கே நகர்ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் எம்பியிடம் மனு
கேகே நகரில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் :திருச்சி மலைக்கோட்டை உச்சிக்குரோப் கார் அமைத்து தர வேண்டும்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் துரை வைகோ எம் பி யிடம் நேரில் கோரிக்கை
திருச்சி கே.கே. நகர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் சங்கநிர்வாகிகள் அண்ணாதுரை , பன்னீர் செல்வம் , பொன்னுசாமி .ண்டபாணி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மலைக்கோட்டைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு செல்ல 417 படிகள் ஏறி செல்ல வேண்டி உள்ளது. படிக்கட்டுகளில் குழந்தைகளும், முதியவர்களும் ஏறி இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக மலைக்கோட்டை உச்சியிலிருந்து நகரின் அழகை ரசிப்பதற்கான வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. எனவே இக் குறைபாடுகளை களையும் வண்ணம் மலைக்கோட்டை கீழ் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் வசதி செய்து கொடுக்க வேண்டும். ரோப் கார் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருகி, வணிக வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். இக்கோரிக்கை குறித்து அவ்வப்போது பல அறிவிப்புகள் வெளிவந்த போதும் இதுவரை இது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது. தொல்லியல் துறையின் அனுமதி கிடைக்காததாலேயே இத்திட்டம் தாமதப்டுகிறது என அறிய வருகிறோம். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் தொல்லியல் துறையை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுத் தரவேண்டும்.மேலும் திருச்சி கே. கே. நகர் பகுதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் ஏற்படுத்தித் தர வேண்டும் திருச்சி கே.கே.நகர் பகுதி உடையான் பட்டி ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

