Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது .தவெக ஆட்சியில் திருச்சியில் தொடரும் சிறுமிகள் கற்பழிப்பு.

0

'- Advertisement -

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்  ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்சோ  சட்டத்தில் கைது .தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் திருச்சியில் தொடரும் சிறுமிகள் கற்பழிப்பு

Ad banner

திருச்சி நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 20). தாரை தப்பட்டை வாசிக்கும் இசைக்கலைஞர்.  இவருக்கும் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும்  பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் பூபதி அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அங்குள்ள முள் காட்டில் வைத்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர் அந்த பேரில் கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக திருச்சியில் சிறுமிகள் கற்பழிப்பு நிகழ்வு அதிகரித்து வருகிறது,சில நாட்களுக்கு இபி ரோட்டில் 18 வயது சிறுமிக்கு மது கொடுத்து கற்பழித்த டிரைவர் கைது செய்யப்பட்டார், அடுத்த நாள் காணாமல் போன 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கற்பழித்ததாக கைது செய்யப்பட்டனர்,இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி ஏற்றி உல்லாசமாக இருந்த போது வலிப்பு ஏற்பட்ட 18 வயது சிறுமி இறந்தது,தற்போது 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்தது என தொடர்ந்து சிறுமிகள் கற்பழிப்பு குற்ற செயல் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.