Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த 18 வயது சிறுமி பலி; உல்லாசத்திற்கு வலி நிவாரண மாத்திரைகள். 15 வயதில் போக்சோ வழக்கில் கைதான காதலன் உள்ளிட்ட 2 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த 18 வயது சிறுமி பலி; உல்லாசத்திற்கு வலி நிவாரண மாத்திரைகள். 15 வயதில் போக்சோ வழக்கில் கைதான காதலன் உள்ளிட்ட 2 பேர் கைது.

Ad banner

விடுதியில் காதலனுடன் தங்கியிருந்த சிறுமி பாலியல் தூண்டுதலுக்கு வலி நிவாரண மாத்திரைகள்? இருவர் கைது

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது காதலனுடன் வலி நிவாரண மாத்திரையை ஊசியில் செலுத்திக் கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாநகரம் அரியமங்கலம் எம்.ஆர்.மில் தெருவைச் சேர்ந்தவர் யாஸ்மின் (வயது 18). இவர் நேற்று முன்தினம் (07.06.2026) இரவு 9.30 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 19) என்பவருடன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள முருகன் லாட்ஜ் என்ற தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

சதாம் உசேன் மற்றும் யாஸ்மின் இருவரும் சேர்ந்து வலி நிவாரண மாத்திரையை ஊசி மூலம் தங்களது உடம்புக்கு ஏற்றிக்கொண்டு உச்சபட்ச உல்லாசத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் உல்லாசத்திற்காக மதியம் பிரியாணி சாப்பிட்ட உடன் சிரஞ் மூலம் மாத்திரை ஏற்றியதாக கூறப்படுகிறது இதனால் மாத்திரை ஓவர் டோஸ் ஆகி வலிப்பு ஏற்பட்டு உள்ளது

அதனை தொடர்ந்து நேற்று மதியம் சுமார் 1.00 மணியளவில், சதாம் உசேன் தனது நண்பரான அரியமங்கலம் தீப்பெட்டி தெருவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 19) என்பவரை

தொலைபேசியில் விடுதிக்கு அழைத்துள்ளார்.

மயக்க நிலையிலிருந்த யாஸ்மினை சதாம் உசேனும், ஷேக் அப்துல்லாவும் அருகில் இருந்த ஆட்டோ மூலம் ஹெட் போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள ஆர்த்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு யாஸ்மின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி உள்ளனர்,அதனைத் தொடர்ந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சோதித்தபோது யாஸ்மின் சுயநினைவற்ற நிலையில் இருந்ததை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி யாஸ்மின் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து வந்த கன்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார், யாஸ்மின் தங்கியிருந்த முருகன் விடுதி அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்து 70 டாபெண்டாடோல் (Tapentadol) வலி நிவாரண மாத்திரைகள், ஒரு சிரின்ஜ், மாத்திரை கலக்கப்பட்ட நீருடன் கூடிய 2 டீ கப்புகள், ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த யாஸ்மினின் தாயார் சகிலா பேகம் அந்த பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி விற்று வருவதாகவும், அவரிடமிருந்தே யாஸ்மின் இந்த மாத்திரைகளை எடுத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.யாஸ்மினின் அண்ணன் போதை மாத்திரை விற்ற வழக்கில் கடந்த பத்து நாட்கள் முன்பு தான் ஜாமினில் வெளிவந்துள்ளார் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாகச் சதாம் உசேன், ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் பகுதியில் அதிக அளவு போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாத்திரைகள் இளம் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இடையே கொடுக்கப்பட்டு உச்சபட்ச சுகத்துக்கு தள்ளப்படுவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் அப்பகுதி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் உள்ள இளம் வயது நபர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது; உயிரிழந்த பெண் பாலியல் தூண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும். இந்த மாத்திரைகள் இணைய வழியில் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த பெண்ணின் தாயாரை விசாரணைக்கு உட்படுத்தி வருகிறோம் என்றனர்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே யாஸ்மின் சதாம் உசேன் உடன் பல ஊருக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது என தொடர்ந்து யாஸ்மின் தாயார் அளித்த புகாரின் பேரில் சதாம் உசேன் மீது 15 வயதில் போக்சோ வழக்கு பதியப்பட்டு இருந்தது.

தற்போது இருவரும் போதை மாத்திரை உட்கொண்டு கொண்டு உல்லாசமாக இருந்த போது யாஸ்மின் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.