திருச்சியில் 17 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை. கார் டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காலில் எலும்பு முறிவு.
திருச்சி காந்தி மார்க்கெட் தாரா நல்லூர் வாழைக்காய் மண்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கல் மந்தை காலனி பகுதியில் வசிக்கும் திருநங்கை வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த சிறுமியின் அண்ணன் ஒருவரும் திருநங்கை ஆவார்.
அந்த திருநங்கையின் தோழியான மற்றொரு திருநங்கை வீட்டில் 17 வயது சிறுமி இருந்த போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் (வயது 45 ) என்பவர் காரில் வந்துள்ளார். கால் டாக்ஸி கார் டிரைவரான அவர் திருநங்கை வீட்டில் இருந்த அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அவரை காரில் அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
பின்னர் அதே காரில் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி கீரைகடை பஜார் பகுதியில் நேற்று இரவு எட்டு மணி அளவில் காரில் இருந்து சிறுமியை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். அப்போது சிறுமி சுயநினைவு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரை மடக்கி மாரி செல்வத்தை தர்ம அடி கொடுத்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த நிலையில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று மாரிச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் மாரிச்செல்வனின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது மேலும் மண்டையும் உடைந்துள்ளது. இதனால் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாரிச்செல்வன் அவ்வப்போது திருச்சி கல்மந்தை காலனி பகுதியில் வசிக்கும் திருநங்கைகளை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வருவாராம் . அந்த வகையில் நேற்று மாலை வந்த போது திருநங்கை ஒருவரின் சகோதரியான பாதிக்கப்பட்ட சிறுமி அங்கே இருந்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள அந்த சிறுமி பின்னர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.
பின்னர் நேற்று மாலை
5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து, அந்த சிறுமியை மாரீசெல்வன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் இரவு 7 மணி அளவில்
திருச்சி கீரைக்கடை பஜார் பகுதியில் காரில் இருந்து அந்த சிறுமியை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமி சுயநினைவின்றி கீழே விழுந்ததால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி இன்னமும்குடி போதை தெளியாமல் உள்ளார். சுயநினைவு திரும்பினால் மட்டுமே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தெரியவரும் என போலீசார் கூறினர். மாரிச்செல்வன் அந்த சிறுமியை
காரில் அழைத்துச் சென்று மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்தாரா அல்லது
எல்லோரும் மொத்தமாக அமர்ந்து மது குடித்த பின்னர் சிறுமியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாரா? என்பது பற்றி தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.
இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் செய்த கார் ஓட்டுநர் மாரிசெல்வன் என்பவரை பொதுமக்கள் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்து,
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாரி செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

