Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழை நீர் தேங்கிய விவகாரம்.போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் அறிவிப்பு.

0

'- Advertisement -

காந்தி மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கிய விவகாரம்

Ad banner

சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்த வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு .

திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம் பெய்த மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது திருச்சி காந்தி மார்க்கெட் அருகில்உள்ள தஞ்சை சாலையில் நேற்று பெய்த திடீர் மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்றது இதனால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர் மேலும் அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அண்மையில் தஞ்சை சாலையில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது ஆனால் இந்த மழை நீர் வடிக்கால் கட்டப்பட்டும் மழைநீர் வெளியேறாமல் இருக்கிறது. இதனை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று காந்தி மார்க்கெட் ஆறாம் நம்பர் கேட் அருகில் வியாபாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சங்கத் தலைவர் கமலக்கண்ணன் அறிவுத்திருந்தார்.இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இரவே அந்த இடத்துக்கு விரைந்து சென்று தேங்கி கிடந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்த காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இனி அந்த இடத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சங்கத் தலைவர் கமலக்கண்ணன் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.