Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருமண்டபம் பத்மநாதன் தவெக வில் இணைந்த திருச்சி அமமுக மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் அனிதா

0

'- Advertisement -

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று ஆட்சி அமைத்து உள்ளது .

Ad banner

இந்த நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளரும் தற்போதைய தமிழக வெற்றிக்கழக முக்கிய நிர்வாகியுமான கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டின் பேரில் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான கு.ப .கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் எஸ்.ஆர். அனிதா தனது டாக்டர் மகள் மற்றும் குடும்பத்தாருடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

இவர்களுடன் வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ்,எஸ் தங்கதுரை, ஆர் வடிவேல் சாமி உள்ளிட்ட பல தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்,

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.