மதபோதகர் பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க முனைவர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை.
மதபோதகர் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜான் ராஜ்குமார் கோரிக்கை.
கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு அதன் தலைவர் ஜான் ராஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாகர்கோவில் மாவட்டம் களியக்காவிளை அருகே நித்திரவிளை என்ற பகுதியில் மதபோதகர் என்ற பெயரில் ஒரு நூதனமான மோசடியில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் அனேக சமூக விரோதிகள், சமூக வன்முறையாளர்கள் இப்படிப்பட்ட விபச்சார செயலை செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
சபை என்ற பெயரில் கிறிஸ்துவுக்கு விரோதமாகவும், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகவும் சமூகவிரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் கண்டிக்கக் கூடியது.
எனவே தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து இப்படிப்பட்ட போலிப் போதகர்களை கைது செய்வது மட்டுமல்ல இந்திய தண்டனைச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.