Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 2 குழந்தைகளின் தாய் மாயம் உள்ளிட்ட இன்றைய க்ரைம் செய்திகள்.

0

1.
திருச்சி தென்னூரில்
ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு.வாலிபர் கைது.

திருச்சி தென்னூர் ஸ்டீல் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது (வயது 42 )இவர் ஆட்டோ டிரைவர் இவருக்கும் ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷெரிப் என்ற வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது இந்நிலையில் ஸ்டீல் தோப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த ரியாஸ் அகமதுவை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டினார் இதில் காயமடைந்த ரியாஸ் அகமது திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து ஷெரீப் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


2.
போதை மாத்திரைகள், ஊசிகள் சிக்கியதை தொடர்ந்து
திருச்சியில் போலீசார் அதிரடி சோதனை.
கஞ்சா விற்றதாக மேலும் 5 பேர் கைது .

திருச்சி மாநகரில் கஞ்சா, போதை மாத்திரைகள் .போதை ஊசிகள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதை அடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் இந்நிலையில் திருச்சி ஜீவா நகரில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள், ஊசிகள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களும் சிக்கின.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் திருச்சி மாநகரில் மீண்டும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் திருச்சியில் கன்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், கேகே நகர் .உறையூர் உள்பட மாநகர் முழுவதும் அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்றதாக கோகுலன், பாவேந்தன். பூபாலன். அமாவாசை ஜெகா ஆகிய ஐந்து வாலிபர்கள் சிக்கினர் அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து போதைப்பொருள் கஞ்சா மாநகரில் வேறு எங்கேனும் விற்கப்படுகிறதா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 .
எடமலைப்பட்டி புதூரில்
இரண்டு குழந்தைகளின் தாய் திடீர் மாயம்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் வங்கி காலனியை சேர்ந்தவர் முகமது ரபிக்.இவரது மனைவி ரேஷ்மா பிவி (வயது 26) முகமது ரபீக் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார் இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ரேஷ்மா பீவி தனது தந்தையின் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மெகபூபாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.
திருச்சி பஞ்சப்பூரில்
நடந்து சென்ற முதியவர் வாகனம் மோதி பலி.
போலீசார் விசாரணை.

திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 70 )இவர் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பிரிவு ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது .உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.