Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசியக் கல்லூரியில் ஆன்லைன் ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.

0

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா திருச்சி தேசியக் கல்லூரியில் கல்லூரி கலையரங்கில்.

நடைபெற்றது நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மற்றும் துணை முதல்வரும் ஆகிய முனைவர் பிரசன்ன பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமை உரை வழங்கினார்.

பள்ளிக் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் மேம்பாட்டிற்கான முன்முயற்சி களை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.அறிவழகன் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

சாதனைகளும், சரித்திரங்களும் தங்கள் பக்கங்களை இளைஞர்களுக்காக நிரப்புவதற்கு காத்து கிடக்கும் போது இளைய சமுதாயம் போதையின் பாதையில் சிக்கி விடக்கூடாது என்றும் தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஒற்றையடிப்பாதையில் மட்டுமே தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து எதிர்கால தமிழ்நாடு என்ற அமைப்பினுடைய நிறுவனர் ஆஷிக் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் பங்கேற்கும் கருத்து சித்திரத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடுவர்களாக சிறப்பித்த ஜெயஸ்ரீ,நடராஜன், மனோஜ், ஷேக் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

நிறைவாக உடற்கல்வியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பூபதி நன்றியுரை கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.