Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு

0

'- Advertisement -

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பசித்து வரும் செல்லக்கண்ணு என்பவரின் மகன் பிரபு தனது தந்தையின் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இருந்தார் .இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட குற்றவியல் காவல்துறையினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Ad banner

இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

1) CPO C,NO: K7/13788/TRC/Dated 19.05.2025 2) C.NO: 175/ACP/CCB/TRC/2025 Dated: 28.05.2025 3) C.NO: 53/INSPR/CCB-II/TRC/2025 Dated: 25.05.2025 4) СРО C.NO: K7/21402/TRC/2025 Dated: 29.07.20255) DC-(N) OFFICE C.NO: 430/DCP, NORTH/TRC/2025 Dated 07.08.2025 6) C.NO: 222/ACP/CCB/TRC/2025 Dated 13.08.25 7) C.NO: 69/INSPR/CCB-II/TRC/2025 Dated: 19.08.2025 புகாரை பெற்று குற்ற முகாந்திர குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை செய்தும் திருச்சி கிழக்கு வட்டாச்சியர் அவர்களிடம் அறிக்கை பெற்றும் அதன் பேரில் குற்ற முகாந்திரம் உள்ளது என தெரியவந்ததால் வழக்கு பதிவு செய்த விபரம் பின்வருமாறு.

 

திருச்சி 16.05.2025 அனுப்புநர் C.பிரபு 43/2025 த/பெ செல்லக்கண்ணு 17B,காளியம்மன் கோவில் தெரு கொட்டப்பட்டு திருச்சி 620004 ( செல் 9940881118) பெறுநர் உயர்திரு காவல் ஆணையர் அவர்கள் மாநகர காவல் அலுவலகம் திருச்சி மாநகரம் ஐயா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு கிராமம், கே.சாத்தனூர் சார்பதிவகத்தை சேர்ந்த கிராம பழைய சர்வே எண் 43 தற்போதைய சர்வே எண் TS.No 74 அதன் வார்டு AF பிளாக் 32 நிலத்திற்கு நான்கு எல்லையில் எனது தகப்பனார் செல்லக்கண்ணுக்கு சொந்தமான நிலம்

 

என்று திருச்சி, கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெரு கதவு எண்-17ல் வசிக்கும் லேட் காமராஜ் மகன் கார்த்திக் அவர்கள் கடந்த 09.05.2014-ம் தேதியன்று கிரையமாக திருச்சி கொட்டப்பட்டு, காளியம்மன் கோவில் தெருவில் கதவு எண்-16 என்ற முகவரியில் வசிக்கும் லே நாகராஜ் மனைவி பரமேஸ்வரி, லேட் நாகராஜ் மகன் தங்கராஜ் லேட் நாகராஜ் மகள் சுமதி, லேட் நாகராஜ் மகள் கவிதா, லேட் நாகராஜ் ஆகியோர் கிரையமாக ஆவண எer 1769/2014-ன் படி எழுதிகொடுத்துள்ளார். மேற்படி கிரைய ஆவணத்தில் தெற்கில் செல்லக்கண்ணு சோழகர் அவர்களுக்கு சொந்தமான நிலம் என்று நான்கு எல்லையில் எனது தகப்பானர் செல்லக்கண்ணு சல்லக்கண்ணுவை குறித்து கிரைய ஆவணம் நான்கு எல்லையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேற்படி கார்த்திக் அவரது தந்தை காமராஜ் அவர்களிடமிருந்து தானமாக மேற்படி நிலத்தினை ஆவண எண் 1770/2014ன் படி தானமாக பெற்றுள்ளார். மேற்படி ஆவணத்திலும் தெற்கில் செல்லக்கண்ணு சோழகர் அவர்களுக்கு சொந்தமான நிலம் என்று எனது தந்தைக்கு உரிமையான இடம் என்று காண்பித்துள்ளனர். இதுவல்லாது மேற்படி கார்த்திக்கின் தந்தை காமராஜ் மற்றும் அவரது பெரியப்பா நாகராஜ அவர்கள் எனது தந்தை,தயார் மற்றும் எனது சகோதரர் மீது திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேற்படி நிலத்தில் கண்டுள்ள தெற்கில் எனது தகப்பனார் செல்லக்கண்ணுக்கு சொந்தமான நிலத்தினை பொதுபாதை என்று வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கானது O.S No 843/2000மாண்புமிகு முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த நிலம் எனது தகப்பனாருக்கு சொந்தம் என்றும் அது பொதுபாதையல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேற்படி TS.NO-74-0 ஆவண எண்-1769/2014-ல் கார்த்திக் கிரையமாக நாகராஜ் வாரிசுகளில் 5-ல் 4பாகம் மட்டும் பெற்றிருந்த நிலையில் அதில் போலியாக எங்கள் நிலத்தை மறைக்கவும் அபகரிக்கவும் பிழை திருத்தல் ஆவணம் தயார் செய்து அதில் எனது தகப்பனார் செல்லக்கண்ணு சொந்தமான நிலம் தெற்கில் உள்ளதை அவரது தந்தை காமராஜ் அவர்களுக்கு சொந்தமான நிலம் என்று காண்பித்துள்ளார். மேற்கண்ட பிழை திருத்தல் ஆவணத்திற்கு கார்திக்கின் பெரியப்பா நாகராஜ் இறந்துவிட்டதால் வாரிசு சான்றிதழ் ஒன்றை கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். அவரது பெரியப்பா காலம் சென்ற நாகராஜ் அவர்களுக்கு வர்களுக்கு உண்மையில் 5 நபர்கள் வாரிசு இருக்கும் நிலையில் 4 நபர்கள் என்று போலியாக வாரிசு சான்றிதழ் உற்பத்தி செய்து தமிழக அரசை ஏமாற்றும் நோக்கில் தமிழக அரசின் முத்திரை கையொப்பம் ஆகியவற்றை போலியாக தயார் செய்து அரசு அலுவலகமான கே.சாத்தனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி பிழை திருத்தல் ஆவணம் ஆவண எண்-3983/2018 ஆக பதிவு செய்து மோசடி செய்துள்ளார்கள். மேற்படி கார்த்திக், பரமேஸ்வரி, தங்கராஜ், சுமதி மற்றும் கவிதா ஆகியோர் கூட்டு சதி செய்து அரசையும் எனது தகப்பனாருக்கு செந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்குடனும் ஏமாற்றி மோசடி செய்யும் நோக்குடன் செயல்பட்டுள்ளனர். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் போது பொது பாதை என கட்சி செய்துவிட்டு பின்னர் அவரது தகப்பனாருக்கு சொந்தமான இடம் என்று கட்சி செய்வதற்காக போலி வாரிசு சான்றிதழ் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு மோசடியாக பிழை திருத்தல் ஆவணம் பதிவு செய்துள்ளனர். மேற்படி வாரிசு சான்றிதழ் உண்மைதன்மையை அறியும் நோக்குடன் நான் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து அதன் மூலம் பெறப்பட்ட உண்மை வாரிசு சான்றிதழ் பெற்று அதனை சரிபார்க்கையில் கார்த்திக்கின் பெரியப்பா நாகராஜ் அவர்களுக்கு 5 நபர்கள் வாரிசு என்றும் ஒரு வாரிசான மதன்குமார் என்பவரை விட்டு போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்து ஆவணம் பதிவு செய்துள்ளனர். எனவே ஐயா அவர்கள் எனது புகாரை ஏற்று எங்களையும் அரசையும் போலியாகவும் மோசடி செய்யும் நோக்குடனும் வாரிசு சான்றிதழ் மோசடியாக தயார் செய்து அரசையும் என்னையும் ஏமாற்றிய கார்த்திக், பரமேஸ்வரி, தங்கராஜ். சுமதி மற்றும் கவிதா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.