ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மர்ம ஆசானுக்கு வலைவீச்சு.

திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில்
கீழகொண்டயம்பேட்டை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 517 இவர் இன்று காலை வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த மர்ம ஆசாமி ஒருவன் அம்பிகா அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அம்பிகா ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அந்த கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

