Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்றும் அனைவரின் நலனுக்காக குரல் கொடுப்பேன். முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

0

'- Advertisement -

முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது முகநூல் பதிவு வெளியிட்டுள்ள பதிவு …..

Ad banner

எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும் போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி.

 

திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும் அவள் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.