பர்கி அணையில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் திருவெறும்பூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் பரிதாப பலி.உடல்களை மீட்க தீவிர முயற்சி
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்தில் இறந்தவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 38) இவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை அவரும் காமராஜ் மனைவி கார்குழலி (வயது 38)அவரது மகன்கள் தமிழ் வேந்தன் (வயது 11) புவிந்திரன் (வயது 11) காமராஜ் அவரது திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த அண்ணன் மனைவி மற்றும் குழந்தைகள் என ஏழு பேர் உட்பட 40 பேர் மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணைப்பகுதியில் போட்டில் சுற்றுலா சவாரி சென்று உள்ளனர்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக போட் கவிழ்ந்ததில் சிலர் பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் அவரது மனைவி கார்குழலி அவரது இளைய மகன் தமிழ் வேந்தன் மற்றும் அவரது அண்ணி அண்ணியின் குழந்தை என ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. இதில் புவீந்தரன் உட்பட இரண்டு குழந்தைகள் லைஃப் ஜாக்கெட் போட்டதால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்குழலி மற்றும் அண்ணி உடலை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர். இந்த நிலையில் காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினர் விமானத்தில் மத்திய பிரதேசம் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் துப்பாக்கி தொழிற்சாலை சேர்ந்த அவரது நண்பர்கள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மூலம் அவர்களது உடலை விரைந்து மீட்டு திருச்சிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு இடையில் தண்ணீரில் மூழ்கி மாயமாகி உள்ள காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்பதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு தொழிற்சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.

