Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அறிமுகப்படுத்தி உள்ள புதிய அப்டேட்கள் விபரம் …..

0

'- Advertisement -

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

 

Ad banner

பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது.

 

ஃபேஸ்புக்கில் உள்ள வசதிகளை முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. இப்போது வாட்ஸப் செயலியிலும் இரண்டிலும் உள்ள அப்டேட்கள் கிடைக்கின்றனர். அதொடு, வாட்ஸ் அப்பில் யு.பி.ஐ. பேமெண்ட் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் WhatsApp-ல் Prepaid மொபைல் டாப்-அப் செய்யும் வசதி படிப்படியாக இந்தியாவில் உள்ள Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவை உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது.

 

இந்த புதிய சேவையை பயனர்கள் ஆப்பின் முகப்புத் திரையில் (Home Screen) உள்ள ஒரு ரூபாய் குறியீட்டு ஐகான் (rupee symbol icon) மூலம் அணுகலாம். இது பேமெண்ட்ஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லும். இங்கு, எந்தவொரு மொபைல் எண்ணையும் தேர்வு செய்து, டெலிகாம் ஆப்ரேட்டரை உறுதிசெய்து, கிடைக்கும் பிளான்களைப் பார்த்து, பரிவர்த்தனையை முடிக்கலாம். UPI, டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு பேமெண்ட் ஆப்ஷன்கள் உள்ளன.

 

ரூபாய் ஷார்ட்கட், தனிப்பட்ட சாட் உரையாடல்களுக்குள்ளும் (chat conversations) அணுகக் கிடைக்கிறது. இதனால், பயனர்கள் தற்போதைய உரையாடல்களில் இருந்து வெளியேறாமல், பேமெண்ட்களைத் தொடங்கலாம் அல்லது ரீசார்ஜ் சேவைகளை அணுகலாம்.

 

இந்த புதிய அம்சம், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் WhatsApp-ன் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும். இந்த பிளாட்ஃபார்ம் ஏற்கனவே சில நகரங்களில் மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் செலுத்துவதற்கும், மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் உதவுகிறது. மேலும், சாட்பாட்கள் மூலம் வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளவும் அனுமதிக்கிறது. மொபைல் ரீசார்ஜ்களைச் சேர்ப்பது, இந்தியாவின் ஏராளமான WhatsApp பயனர்களுக்கு இதன் மதிப்பை மேலும் அதிகரிக்கிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.