திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை
Loader at Trichy Gandhi Market Commits Suicide
திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை

போலீசார் விசாரணை
திருச்சி தென்னூர் குப்பரங்குளத்தைசேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் கடந்த 20 வருட காலமாக தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். திருமணமும் செய்து கொள்ளவில்லை, இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத்தை பிரிந்த மனஉளைச்சலால் மது பழக்கத்தில் இருந்து வந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ( 13 ந் தேதி) செந்தில்குமார் வீட்டின் அறையில் நைலான் கயிரால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனைப் பார்த்தஅ திர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தில்லைநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

