Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவேன் என கூறிய திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்

0

'- Advertisement -

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தனது தொகுதியில் பம்பரமாக சுழன்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து நாங்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்போம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் வேட்பாளர் குமார் பாரம்பரிய முறைப்படி அனைத்து ஊர்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு எனது சொந்த செலவில் நடத்திக் கொடுப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார்.

Ad banner

(அந்த வாக்குறுதி பாரம்பரிய முறைப்படி அனைத்து ஊர்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டை எனது செலவில் நடத்திக்கொடுப்பேன் என பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு சூரியூர் மற்றும் காட்டூரில் மட்டுமே ஜல்லிக்கட்டை நடத்திய ஆஸ்கர் நாயகன் போல் இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பேன்.

சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கொண்ட ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்படும்.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்கு தேவையான தடுப்பு வேலி (BARRY GUARD) வாடிவாசல், மேடை, பார்வையாளர்கள் மாடம் பத்திரிக்கையாளர் மாடம், புறவாடிவாசல் காளைகள் சேகரிக்கும் இடம்) அனைத்து பொருட்களும் எனது சொந்த செலவில் வாங்கப்பட்டு ஜல்லிக்கட்டு குழுவிடம் ஒப்படைக்கப்படும். )

 

இந்த இந்த வாக்குறுதிக்கு முழு ஆதரவு தெரிவித்து திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேட்பாளர் குமாரை சந்தித்து நன்றி தெரிவித்து எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

 

இந்த நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ். கே. டி. கார்த்தி,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜ மணிகண்டன்,செயற்குழு உறுப்பினர் சாந்தி,பகுதி செயலாளர் பாஸ்கர், பாலசுப்ரமணியன்,வட்ட செயலாளர் மற்றும் பாரதிய ஜனதா,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் , பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.