Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் திமுக வேட்பாளர் கே என் நேரு பஞ்சபூரில் பஸ் ஸ்டாண்ட் கட்டியது தனது 40 ஏக்கர் இடத்தை விற்பனை செய்ய தான்,லால்குடியில் 500 ஏக்கர் இடம் வாங்கியுள்ளார் என பகிரங்கமாக விமர்சிப்பது பெட்டிக்காக தான்.

0

'- Advertisement -

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே என் நேருவும்,தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எம். ராஜசேகரன் தமிழக வெற்றி கழகம் சார்பில் க. ராமமூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.புவனேஸ்வரி ஆகியோர் இடையே தான் போட்டி நிலவுகிறது .

 

Ad banner

2006 ல் லால்குடி தொகுதியில் இருந்து அப்போதைய திருச்சி 2 (தற்போதைய மேற்கு) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நேரு.அன்று முதல்கடந்த 20 வருடங்களாக இதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் .2011 பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மரியம் பிச்சை மற்றும் பரஞ்சோதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

அதன் பின்னர் 2016 ல் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரணையும் , 2021 ல் கருமண்டபம் பத்மநாபனையும் தொடர்ச்சியாக நேரு வென்றார்.

 

கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு பெரிய தொகையை அளித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டாம்,அதுபோல் ஓட்டுக்கு பணமும் கொடுக்க வேண்டாம் என அமைச்சர் நேரு கூறி அதிமுக வேட்பாளரை விலைக்கு வாங்கியதாக கூறப்பட்டது.

 

கடந்த தேர்தலில் 1,15,313 வாக்குகள் பெற்றார் .அதாவது 67.02 சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 32.98 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.

 

ஆனால் இந்த முறை ஜனநாயக கூட்டணி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராஜசேகரன் (தொட்டியம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தற்போது நேருவை எதிர்த்து போட்டியிடுவது பெட்டிக்காக தான் என அப்போது கூறப்பட்டது .தற்போது பிரச்சாரத்தில் அமைச்சர் நேயர்வை கடுமையாக தாக்கி பேசி வரும் ராஜசேகரன் உதாரணமாக அமைச்சர் நேரு தற்போது லால்குடியில் 500 ஏக்கர் இடம் வாங்கி உள்ளார்,திருச்சி பஞ்சப்பூரில் அவர் பேருந்து நிலையம் கொண்டு வந்ததே அவரது 40 ஏக்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தை அதிக லாபத்தில் விற்பனை செய்வதற்காக தான் என பொது இடங்களில் அமைச்சர் நேரு குறித்து தோலுரித்து பேசி வருவது பெரிய அமௌன்ட் எதிர்பார்த்து தான் .

 

இவர் எந்த அளவு தீவிரமாக நேருவை தாக்கி பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அந்த அளவுக்கு பெட்டி வெயிட்டாக மாறும் எனக் கூறப்படுகிறது .

 

அவரது கட்சி நிர்வாகிகள் சிலரே ஏற்கனவே பெட்டி வாங்கி விட்டார் போல் தெரிகிறது ஏனென்றால் மற்ற வேட்பாளர்கள் எல்லாம் காலை ஏழு மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.ஆனால் இவர் காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் ஏதாவது ஒரு பகுதியில் பெயரளவுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் என கூறுகின்றனர்.

 

போன முறை அதிமுக வேட்பாளர் 32 சதவீதம் வாக்குகள் பெற்றார் . இந்த முறை இவர் 30% வாக்குகளை பெறுவாரா என்பது சந்தேகம் தான் என கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

 

இவர் ஏன் பெட்டிக்காக போட்டியிடுகிறார் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர் என்றால் இவர் கொள்கை எதுவும் இல்லாதவர்.காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகள் பணத்துக்காக மாறி சென்று தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.