Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வச்ச குறி தப்பாது, இந்த புலி தோற்காது,எதை கண்டும் அஞ்சாது எதிரியை விடாது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் தற்போதைய 4 திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதன் பின்னணியின் அமைச் கே.என். நேரு இருப்பதாக வாய்ப்பு இழந்த எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளை கடந்த 2021ல் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கியது திமுக தலைமை.

திருச்சி கிழக்குத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், திமுக உறுப்பினராக இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

 

மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. வெளியேறிய 7 தொகுதிகளில் கடந்த 2021 இல் திருச்சி மேற்கில் அமைச் கே.என். நேரு, திருவெறும்பூரில் அமைச் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முசிறியில் ந. தியாகராஜன், ஸ்ரீரங்கத்தில் எம். பழனியாண்டி, மண்ணச்சநல்லூரில் சீ. கதிரவன், லால்குடியில் அ. செளந்தபாண்டியன், துறையூரில் செ. ஸ்டாலின்குமா ஆகியோா் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இவைகளில் எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா்,காடுவெட்டி ந. தியாகராஜன் அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், அமைச்சா நேருவுடன் ஏற்பட்ட மோதலை, பகிரங்கமாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது பதிவு செய்து அதிருப்தி வெளியிட்டு வந்தாா். இதனால் இப்போது இவருக்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர் அக் கட்சியினா்.இதுகுறித்து சௌந்தரபாண்டியனிடம் கேட்டபோது எல்லாம் அமைச்சர் கே.என். நேருவின் காழ்ப்புணர்ச்சி தான் எனக்கூறி உள்ளார். இவருக்குப் பதிலாக த. பாரிவள்ளல், லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி மீதான பல்வேறு புகாா்களால், அமைச்சா் தரப்பு எம்எல்ஏவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இருப்பினும் முதல்வரை தனது இல்லத் திருமண விழாவுக்கு அழைத்து வந்து, கட்சிக்கு ரூ.51 லட்சம் நிதியும் கொடுத்தார். எனவே, மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்தாா். ஆனால், இந்தத் தொகுதியை திமுக மத்திய மாவட்டப் பொருளாளரான எஸ். துரைராஜ், அமைச் கே.என். நேருவின் நிழலாக எப்போதும் அவருடனே இருந்து சீட் பெற்றுவிட்டாா்.

 

திமுக வடக்கு மாவட்டச் செயலராக உள்ள காடுவெட்டி.ந. தியாகராஜனுக்கும் முசிறியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. (நேருக்கு எதிராக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் முதல் கையெழுத்து போட்டவர் காடுவெட்டி தான்) அவருக்குப் பதிலாக மறைந்த வனத்துறை அமைச்சா் என். செல்வராஜின் மகன் என்.எஸ். கருணை ராஜா முசிறியில் போட்டியிடுகிறார்.

 

துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்றிருந்தும் இம்முறை வாய்ப்பு இல்லை. இவரும் அமைச் கே.என். நேருவிடம் எதிா்ப்பைப் பெற்றிருந்தாா் என்கின்றனா் கட்சியினா்.

 

லால்குடியில் தொடந்து நான்கு முறை வென்ற அ. செளந்தரபாண்டியனும் புறக்கணிக்கப்பட்டுள்ளாா். இந்த முறை அவா் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கே.என். நேருவுடன் அவரும் அமைச்சாப் பதவிக்கு உரிமை கோருவாா். எனவே அவருக்கு ‘செக்’ வைக்கப்பட்டு விட்டது.

ஆனால் மண்ணச்சநல்லூா் சீ. கதிரவன் எம்எல்ஏ மீது, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு தொடா்பான புகாா்,கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தேதி அறிவித்த பின்பு சொகுசு கார்கள் வழங்கி சமூக வலைதளங்கள் வெளியிட்டது என பல புகார்கள் எழுந்த நிலையிலும் எதிா்க்கட்சிகளும் கடுமையாக விமா்சித்துள்ளன. ஆனால், அனைத்து மீறி (விட்டமின் ப.வால்) அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துவிட்டு, 4 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அக் கட்சியினரிடையே பெரிதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர் மீது தனது அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது அவரது செருப்பை எடுத்து போட்டு தங்களது விசுவாசத்தை காட்ட சிலர் இருப்பார்கள்.கார் கதவை திறந்து விட சில அடிமைகள் இருப்பார்கள்.அப்படி உள்ள 4 பேருக்கு தான் எம் எல் ஏ சீட் வழங்கப்பட்டுள்ளது என அதிருப்தி உடன்பிறப்புகள் சிலர் கூறுகின்றனர்.

திருச்சி மேற்கு, திருவெறும்பூா் தொகுதிகளில் மீண்டும் அமைச்சாகளான கே.என்.நேரு, முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் களம் காண உள்ளனர். 

இந்த செய்தியை அடித்துக் கொண்டிருக்கும் போது சன் மியூசிக் சேனலில் கூலிக்காரன் படத்தில் வரும் வச்ச குறி தப்பாது, இந்த புலி தோற்காது,எதை கண்டும் அஞ்சாது எதிரியை விடாது என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.இந்தப் பாட்டுக்கும் செய்தி வரும் போது எனக்கு தெரியவில்லை.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.