திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்.
திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 67).
இவர் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும், பீடி சுற்றும் வேலை செய்து வந்தார். இவரது மகன் சுரேஷ் கண்ணன் இவர் தினசரி அவரது தந்தையைக் காண அவரது வீட்டிற்கு சென்று உணவு கொடுத்து வந்தார் இந்த நிலையில் முத்து அக்கம் பக்கத்தினர் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் அதிகளவு தூக்க மாத்திரை தின்று மூதாட்டி உயிரிழப்பு .
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை எம் .எம். நகரை சேர்ந்தவர் விமலா (வயது 71 ) .
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 13 ஆம் தேதி இவர் தன் வீட்டில் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவரது மகள் சாந்தி அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார் .அங்கு சிகிச்சை பெற்று வந்த விமலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

