திருச்சியில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி ,இளம்பெண் திடீர் மாயம்.
திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து அவரது மனைவி செல்வத்துடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் அவர் குறித்து விசாரித்தார். அப்போது அவர்கள் செல்வம் வேலைக்கு வரவில்லை என கூறியுள்ளனர். பிறகு வெகுநேரமாகியும் செல்வம் வீடு திரும்பவில்லை. இது குறித்து செல்வத்தின் மனைவி ராஜகுமாரி கே.கேநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் இளம் பெண் திடீர் மாயம்.
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 65). இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 27). இவர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இதனால் தினமும் மேல புதூர் பகுதியில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஜெயஸ்ரீயை அவரது தந்தை தினமும் போட்டி தேர்வு தயாராகும் நிலையத்தில் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற ஜெயஸ்ரீ திடீரென மாயமானார். இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் கேட்டபோது அவர் ஏற்கனவே சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர் இது குறித்து ஜெயஸ்ரீயின் தந்தை அளித்த புகாரின் பெயரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயஸ்ரீ தேடி வருகின்றனர்.

