Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக திருமண வீட்டார்,மண்டப உரிமையாளர்கள் பரிதவிப்பு.

0

'- Advertisement -

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்பட்டு, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அன்றாடம் உணவு சமைப்பதற்கு அத்தியாவசிய தேவையான சிலிண்டர்களின் தட்டுப்பாட்டால் இத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு திருமண மண்டபங்களிலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.

இதனால் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்கனவே புக்கிங் பெற்றுள்ள மண்டப உரிமையாளர்கள், சிலிண்டர் கேட்டு கேஸ் ஏஜென்சியை நாடியுள்ளனர். அப்போது, வணிக பயன்பாட்டிற்கு கேஸ் விநியோகம் இல்லை என மறுத்ததால், திருமண நிகழ்ச்சிக்கு விருந்து தயாரிக்க சிலிண்டர் கிடைக்காமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

 

பெரும்பாலான திருமண மண்டபங்கள் விறகு அடுப்புக்கு பதிலாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நவீன முறைக்கு மாறிவிட்ட நிலையில், தற்போது நிலவும் சிலிண்டர் தட்டுபாட்டால், சமையல் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

இந்தசூழலில் தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மண்டப உரிமையாளர்களும், திருமண வீட்டாரும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சற்றுமுன் வந்த தகவலின்படி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.