பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் அறிக்கை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை.
திருச்சி பஞ்சப்பூர் அருகில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்து கொள்ள திருச்சி வருகை தரும்..
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு (11.3.2026, புதன்கிழமை) காலை 9.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மாணவரணியினர் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என
திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் குமார் மற்றும் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

