திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை திமுகவின் சார்பில் நடைப்பெறும் மாநாட்டை முன்னிட்டு காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம். சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுகலூரில் நாளை திங்கட்கிழமை 09.03.2026 அன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் 12வது மாநில மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட திரளான தொண்டர்கள் மற்றும் மக்கள் கலந்து கொள்ள உள்ளதால் மேற்படி மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நாளை 09.032026 அன்று காலை 0600 மணி முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம் விபரம்:
மேற்கு மண்டலத்திலிருந்து கரூர் வழியாகவும், தொட்டியம் வழியாக வரும் வாகனங்கள் குளித்தலை -துறையூர் நாகலாபுரம் நக்கசேலம் செட்டிகுளம் இரூர் ஆலத்தூர் நெடுங்கூர். சிறுகலூர் வழியாக வந்து மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
தென் மண்டலத்திலிருந்து மதுரை வழியாக வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி விராலிமலை -பஞ்சப்பூர் மன்னார்புரம் நம்பர் 1 டோல்கேட் Y ரோடு பனமங்கலம் சென்று அங்கிருந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூர் கட் ரோடு தச்சங்குறிச்சி வழியாக சிறுகலூர் வந்து மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
தஞ்சாவூர் டெல்டா பகுதியிலிருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் தஞ்சாவூர் திருமலைசமுத்திரம் பூதலூர் பூண்டி செங்கரையூர் பாலம் அன்பில் பூவாளூர் குமுளூர்-தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
கடலூர் மற்றும் அரியலூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அரியலூர் குன்னம் பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆலத்தூர் பாடலூர் – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
திண்டுக்கல் வழியாக வரும் வாகனங்கள் தங்கம்மாபட்டி வையம்பட்டி மணப்பாறை-ராம்ஜி நகர். கருமண்டபம் – மன்னார்புரம் நம்பர் 1 டோல்கேட் ஒய் ரோடு பணமங்கலம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூர் கட் ரோடு-தச்சங்குறிச்சி-சிறுகலூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
வடக்கு மண்டலத்திலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பலூர். சிறுவாச்சூர். பாடாலூர். சிறுகலூர் வழியாக மாநாட்டு திடலுக்கு சென்று மீண்டும் அதே வழியில் வெளியேற் வேண்டும்.
வழித்தடம் மாற்ற விபரம்:
1) சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பை ரோடு வழியாக துறையூர், முசிறி. குளித்தலை, மணப்பாறை வையம்பட்டி வழியாக செல்லவேண்டும்.
2. சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பை ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை. மணப்பாறை, புத்தாநத்தம் துவரங்குறிச்சி வழியாக செல்லவேண்டும்.
3) மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் விராலிமலை வழியாக மணப்பாறை குளித்தலை. முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்லவேண்டும்.
4) சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பை ரோடு வழியாக துறையூர் முசிறி. குளித்தலை.கரூர் சென்று வரவேண்டும்.
5) சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பொம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி குளித்தலை. மணப்பாறை விராலிமலை வழியாக சென்று வரவேண்டும்.
6) அரியலூர் மற்றும் டால்மியாவிலிருந்து சேலம், நாமக்கல் (மேற்கு மாவட்டங்கள்) நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் டால்மியா கீழப்பழுர், பெரம்பலூர் துறையூர், நாமக்கல் மார்க்கமாக செல்ல வேண்டும்.
எனவே, மாநாட்டுக்கு வரும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் (09.03.26) அன்று ஒரு நாள் பொது போக்குவரத்தில் ஏற்படும் மாற்றத்தை தெரிந்து கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைக்கும் படி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

