திருச்சி கலெக்டர் ஆபிஸ் சாலையில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி ஷ்வார்ட்ஸ் ஹாலில் திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் சார்பில் அகில உலக மகளிர் தின விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோல போட்டி,மேக்கப் போட்டி,சமையல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறந்த கல்வி பணியாற்றிய காவேரி கல்லூரி முனைவர் சுஜாதா,சின்மயா மிஷின் சேவகி ஜெயந்தி சீனிவாசன்,நல் வாழ்க்கைக்கு உருவகப்படுத்தும் மல் வி குவிவிஸ்ட் குளோபல் எஜுகேஷன் கன்சல்டன்சி நிர்வாக இயக்குனர் மலர் விஸ்வநாதன் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார் சிறப்பு விருந்தினர் சின்னத்திரை நடிகை சுருதி சண்முகப்பிரியா.
இந்த நிகழ்ச்சியினை அனைத்து பெண்கள் சங்கங்களின் சேர் குழு உறுப்பினர் ஜெயந்தி ராஜ்குமார்,சூர்யா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

