அந்த ஒற்றை வார்த்தை போதும். அவருக்காக நான் உழைத்துக் கொண்டே இருப்பேன்.திருச்சியில் நடைபெற்ற பாசறை கூட்டத்தில் கு.ப. கிருஷ்ணன்.
விஜய் மக்கள் ளுடன் கூட்டணி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும். பாசறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் குப. கிருஷ்ணன் பேச்சு.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாசறை கூட்டம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேர்தல் கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் இணை கண்காணிப்பாளர் சுந்தர்,திருச்சி மாவட்ட தேர்தல் பிரச்சார குழு உறுப்பினர் பிச்சைரத்தினம் கரிகாலன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மோகன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ்வரன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அருள்விஜய் ,திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர் குப. கிருஷ்ணன் பேசிய போது :-
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளவன் நான்.நீங்கள் எப்படி த வெ.க.வில் இணைந்தீர்கள் என என்னிடம் சில கேள்வி எழுப்புகிறார்கள்.இதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான்.
விஜய்யை நான் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டு அவரிடம் பேசும் பொழுது தன்னை, தலைவர் என்றோ, தளபதி என்றோ அழைக்க வேண்டாம். தம்பி என்றே அழையுங்கள் என்று கூறினார்.அவர் கூறிய அந்த ஒற்றை வார்த்தை எனக்கு போதும். அவருக்காக நான் உழைத்துக் கொண்டே இருப்பேன். இன்றைக்கு
இளைஞர்கள் அதிகம் கொண்ட கட்சி தவெக. எனவே வெற்றி வாகை சூடி விஜயை ஆட்சிக்கட்டிலில் நாம் அனைவரும் அமர வைக்க வேண்டும். கருர் சம்பவத்தில் 41 பேர் இறந்ததில் சதி நடந்துள்ளது.கருவூர் சம்பவத்தில் விஜய்யிடம் விசாரணை நடத்த டெல்லி அழைத்து சென்றது ஏன்?சம்பவம் நடந்தது கருர்.ஆனால் விசாரணை மட்டும் டெல்லி . எந்த சட்டத்தில் இப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை கரூரில் தளபதி விஜய் விசாரணைக்கு வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. பாதுகாப்பு தர முடியாது என்பதற்காக டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினார்களா?அண்மையில் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 666 கோடி வரவு வந்துள்ளது என்றும் 3 லட்சத்து 93 ஆயிரத்து 271 கோடி செலவு ஆனது என்றும்,48 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளனர்.இந்த பற்றாக்குறை உள்ள பட்ஜெட்டை எப்படி சரி செய்வார்கள் என்பது பற்றி அரசு கூறவில்லை. இதனை எதிர்க்கட்சிகளும் கேட்கவில்லை.நாங்கள் கேட்கிறோம் இந்த பற்றாக்குறையை எப்படி சரி செய்வீர்கள்.இது குறித்து எங்களிடம் விவாதம் நடத்த தயாரா ? இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது நம்முடைய வெற்றி கழக படையை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும்
தவெக வெற்றி பெற பாடுபட வேண்டும்.தொகுதியில் யார் வேட்பாளராக நிற்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது.தளபதி விஜயை முதலமைச்சராக்கஒவ்வொரு தொகுதியிலிருந்து ஒரு எம்எல்ஏ செல்ல வேண்டும் என்பதை மனதில் நினைத்து செயல்பட வேண்டும்.
வெற்றி ஒன்றை குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டும்.கூட்டணி நம்மிடம் யாரும் வைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம் நம்முடைய தலைவர் விஜய் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்று பேசினார்.
முடிவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏரொளமானவர்கள் கலந்து கொண்டனர்.

