முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திமுகவில் இணைய மறுத்துள்ளார். இது அதிமுக மீட்புக் கழக ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மீட்புக் கழக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ‘மாலை மலர்’ நிருபரிடம் பேசியபோது, ‘ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவன் நான். அவரால் 2016-ல் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றேன். ஐந்தாண்டுகள் அமைச்சராக சிறப்பாக பணியாற்றினேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தலைமையை ஏற்று பணியாற்றினேன். ஆனால் இன்று ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். என்னையும் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை. ‘நீங்கள் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டேன்.
ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனக்கு திமுகவில் இணைவது மனதுக்கு ஏற்படவில்லை. அது என்னால் செய்ய முடியாது. இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்’ என்றார்.
வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்ஸுக்கு அடுத்தபடியாக வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தபோதும் அவர் இணையவில்லை, ‘ஓபிஎஸ் முடிவே என் முடிவு’ எனக் கூறி வீட்டிலேயே இருந்தார். இப்போதும் அதே நிலைப்பாட்டை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலர் வேறு பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். குன்னம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் ஜெயலலிதா படத்தை தூக்கி எறிந்து திமுகவில் இணைவதா என குடும்பத்தினர் கேட்டபோது மனம் நொந்து, ‘அரசியலை விட்டு விலகுகிறேன்’ என அறிவித்தார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதிமுக மீட்புக் கழக ஆதரவாளர்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. வெல்லமண்டி நடராஜன் அடுத்து என்ன செய்வார்? தவெகவா? தாய்க்கழகமா? அல்லது அரசியலை விட்டு விலகுவாரா? என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். தமிழக அரசியல் களம் இப்போது மிகுந்த சூடுபிடித்துள்ளது!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. 
ஆனால் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திமுகவில் இணைய மறுத்துள்ளார். இது அதிமுக மீட்புக் கழக ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

