Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்டோர்.மாநகர செயலாளர் சீனிவாசன் செயல்பாட்டை கண்டு மாற்றுக் கட்சியினர் அதிர்ச்சி.

0

'- Advertisement -

திருச்சி தில்லை நகரில் உள்ள அதிமுக மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையில் 17வது வார்டு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகி அ.ப.விஜயபாஸ்கர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

 

கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அதிமுக கட்சி சால்வை அணிவித்து உறுப்பினர் படிவம் வழங்கி அதிமுகவில் இணைத்து கொண்டார்.

 

கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மாநகர மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்று வருகிறது.இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஓய்வின்றி மாநகர செயலாளர் சீனிவாசன் நேரில் சென்று பங்கேற்று சிறப்பித்து வரும் வேளையில் மாற்றுக் கட்சி உறுப்பினர்களை அதிமுகவில் இணைத்தது திருச்சி அதிமுகவினருடைய பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

அதே போன்று மாற்று கட்சியை சார்ந்தவர்கள் பெறும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.