திருவானைக் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரம். அடிமனை உரிமையாளர்கள்திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு .
திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் ரூ. 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை
திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர செயல் அலுவலரை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் இன்று திருவானைக்காவில் அடிமனை உரிமையாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர் மாரி(எ) பத்மநாபன் மற்றும் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் எஸ் கலைமணி, பிரஸ் வெங்கடேசன், எஸ் கே ராஜு, வைத்தியநாதன், ராஜகோபாலன், மெக்கானிக் பாஸ்கர், ராஜகோபாலன், திருவேங்கடம் யாதவ், வி.என்,ஆர் செல்வம், பாலசுப்பிரமணியம் தர்மலிங்கம், ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன்
மற்றும் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கோரிக்கை மனு அளித்தனர்.

