அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாராட்டு விழா .திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி காட்டூர் தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேராயர் கென்னடி ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
பாஸ்டர் பிரசாத் தேவசித்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஸ்டர்கள் விஜய சகாயராஜ்,
பால், ரத்தினம், ஸ்டீபன் , ஸ்டீபன் சவரிராஜ், கிங்ஸிலி பாஸ்டர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் திருச்சபை கோரிக்கைகளை ஏற்று திருச்சி திருவெறும்பூர் சூரியூர் பகுதியில் கல்லறைக்கு இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்து கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கமிட்டி சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர் .
அதேபோல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்பிலார் அறக்கட்டளை சார்பில் அதனை வழங்க ஆவணசெய்வேன் என
தெரிவித்தார்.
மேலும் கல்லறை நிலத்தில் சிற்றாலயம் ஒன்றையும் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனையும் அரசிடம் தெரிவித்து செய்து தருவதாக உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் ,
பொதுமக்கள் மற்றும் பெந்தகோஸ்தே சபை நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொண்டன

